
திருச்சி மாநகர பகுதியை கடந்து செல்லும் உய்யக்கொண்டான் கால்வாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையால் துர்நாற்றம் வீசுவதாகவும் ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று திருச்சி கிழக்குத் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜின் உத்தரவின் பேரில் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட துரைசாமிபுரம் பகுதியில் அதற்கான முதற்கட்ட பணியைத் துவங்கினார்கள்.
மேலும் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அவர்கள், துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேரில் சென்று வரகனேரி எடத்தெரு மற்றும் பாலக்கரை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஆகாயத் தாமரையை அகற்றும் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் துணை மேயர் திவ்யா, மண்டலம் 2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பகுதி கழக செயலாளர், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.