Skip to main content

“ஆளுநர் பெருமையை இழந்துவிட்டார்..” - எம்.எல்.ஏ. ஐயப்பன் 

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

MLA Ayyappan spoke about governor rn ravi

 

சுதந்திரப் போராட்ட தியாகியும், தகைசால் தமிழருமான தோழர் சங்கரய்யா 102 வயதில் சென்னையில் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

 

இதனைத் தொடர்ந்து சங்கர் ஐயாவின் மறைவிற்கு தமிழக முழுவதும் இரங்கல் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூரில் சங்கரய்யாவின் மறைவிற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். இதில் கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்துகொண்டார். 

 

இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. ஐயப்பன், “தோழர் சங்கரய்யா கொள்கைக்காக வாழ்ந்தவர். திமுக தலைவர் கலைஞருடன் மிகவும் நெருக்கமாக இருந்து அடித்தட்டு ஏழை பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களுக்காகவும் பாடுபட்டவர். தனக்கென்று எதையும் அவர் தலைவரிடம் கேட்டதில்லை. மார்க்சிய கொள்கையில் உறுதியாக கடைசிவரை இருந்த மகத்தான தலைவர்.

 

இவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். அப்படி வழங்கி இருந்தால் ஆளுநர் மாளிகைக்கே பெருமை கிடைத்திருக்கும். அந்த பெருமையை ஆளுநர் இழந்துவிட்டார். அவரைப் போல் அனைவரும் கொள்கை பிடிப்புடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்” என சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி செலுத்தினார். இந்தக் கூட்டத்தின் போது சிதம்பரம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஆனால், அந்த மழையையும் பொருட்படுத்தாமல் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு கொட்டும் மழையில் தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஹத்ராஸ் துயரம்; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Hathras incident Tamil Nadu CM MK Stalin obituary

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் இன்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி குழந்தைகள், பெண்கள் என 122 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Hathras incident Tamil Nadu CM MK Stalin obituary

அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில் ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான நெரிசலில் விலைமதிப்பற்ற உயிர்களின் சோகமான இழப்புகளால் ஆழ்ந்த வேதனையில் ஆழ்ந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Hathras incident Tamil Nadu CM MK Stalin obituary

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் துயரம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Hathras incident Tamil Nadu CM MK Stalin obituary

மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மீக சத்சங்க நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெறவும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மீண்டும் பதவியேற்ற ஜெகநாதன்; போராட்டத்தை அறிவித்த ஆசிரியர் சங்கம்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Re-instated Vice-Chancellor Jaganathan; The teachers union announced the strike

பல்வேறு ஊழல் மற்றும் சாதிய ரீதியிலான செயல்பாடுகளில் சிக்கி, புகார்களுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு மேலும் ஒரு வருடம் தமிழக ஆளுநர் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் ஜெகநாதன் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது. அரசினுடைய அனுமதி இல்லாமல் முன்னாள் பதிவாளர் தங்கவேலுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களைத் தொடங்கிய புகாரின் அடிப்படையில் ஜெகநாதன் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதோடு மட்டுமல்லாது உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகளில் ஜெகநாதன் ஈடுபட்டதாக மீது ஆசிரியர் சங்கம் மற்றும் பணியாளர்கள் 500 பக்கங்கள் கொண்ட புகார் கடிதத்தைத் தமிழக ஆளுநருக்கு எழுதியிருந்தனர்.

இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் சாதிய ரீதியாக செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து துணைவேந்தர் ஜெகநாதன் மீதான புகார்கள் குறித்து உயர்கல்வித்துறை அரசு செயலாளர் பழனிசாமி தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை அறிக்கையும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி முதல் ஜெகநாதன் ஓய்வுபெற இருந்த நிலையில் மேலும் ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு செய்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை எதிர்த்து ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்றுடன் பதவி முடிந்த ஜெகநாதன் ஆளுநரின் பதவி நீட்டிப்பைத் தொடர்ந்து, மேலும் ஒரு வருடம் பணியைத் தொடர்வதற்கான கோப்பில் கையொப்பமிட்டு பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.