Published on 24/04/2019 | Edited on 24/04/2019
மு.க. அழகிரி மகன் துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ. 40 கோடி மதிப்புள்ள சொத்துகள் சென்னை மற்றும் மதுரை பகுதிகளில் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கீழவளவில் கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தியதால் அரசுக்கு ரூ.257 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் துரை தயாநிதி உட்பட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.