Skip to main content

தமிழ்நாட்டில் கரோனா சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா...? -அமைச்சர் ஜெயக்குமார் நக்கல் பதில்!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020
f

 

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன.

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை நெருங்க இருக்கின்றது. கேரளாவில் சில இடங்களில் கரோனா, சமூக பரவல் கட்டத்திற்கு சென்றுவிட்டதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் 4000க்கும் மேலான கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் சமூக பரவல் நிலையை எட்டி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “அவர் என்ன மருத்துவரா? அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்