"நீங்கள் இந்தியரா?" என திமுக எம்.பி. கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கேட்ட கேள்வியால், அதிர்ச்சி அடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கனிமொழி.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீஸ், என்னிடம் இந்தியில் எதையோ சொன்னார்.
அதற்கு நான், எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றேன். உடனே அவர், நீங்கள் இந்தியரா? என கேட்டார். உடனே நான் திடுக்கிட்டேன். இந்தி தெரிந்தால் போதும் அது இந்தியராக இருப்பதற்கு சமமா என்பதை அறிய விரும்புகிறேன் என ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார் கனிமொழி எம்.பி. !
இது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், 'இந்தி ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயன்றால் அடிமுதல் நுனிவரை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்ப்போம். .பன்முக தன்மைதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு வளம் சேர்க்கிறது என்பதை உணரவில்லை' என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.