Skip to main content

ஒரு வேளை நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன்-உறுதியாய் நின்ற அபிநந்தன்

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனையடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட வீடியோ இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அபிநந்தன் தாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதனை அடுத்து வெளியான வீடியோவில் ரத்த காயத்துடன் அவரிடம் விசாரணை மேற்கொள்ளும் காட்சிகள் வெளியானது. 

 

அதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், அவர் தேநீர் அருந்தி கொண்டு பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

 

 Maybe I will not change my answer if I return to India

 

அந்த வீடியோவில் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானியிடம் பாகிஸ்தான் இராணுவ மேஜர் கேட்ட கேள்விக்கு நமது வீரர் அளித்த பதில்.

கேள்வி : உங்களுடைய பெயர் என்ன ? 

பதில் :wing Commander அபினந்தன்.

கேள்வி : நாங்கள் உங்களை நன்றாக நடத்தி இருக்கிறோம் என்று நம்புகிறோம் என்று பாகிஸ்தான் இராணுவ அதிகாரி சொன்னார்.

 

பதில் : கண்டிப்பாக நன்றாக கவனித்தீர்கள். ஒரு வேளை நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன்.பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர்.அவர்களுக்கும் என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.இதே போன்று தான் எங்களுடைய இந்திய இராணுவமும் உங்களை மரியாதையோடு நடத்தி இருக்கும் என்றார்.

கேள்வி : நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.

பதில் : என்னால் இதற்கு பதில் அளிக்க முடியும்.ஆனால் எந்த இடம் என்று குறிப்பிட்டு நான் சொல்ல மாட்டேன்.தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன் என்று கூறினார் நமது வீரர்.

கேள்வி : உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா ? 

பதில் : ஆம் sir ஆகி விட்டது.

கேள்வி : நீங்கள் அருந்தும் டீ நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

பதில் : டீ மிகவும் அருமையாக உள்ளது என்றார்.

கேள்வி : நீங்கள் வந்த விமானத்தின் பெயர் என்ன என்றார் ? 

பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.

கேள்வி : உங்களுடைய இலக்கு என்ன ? 

பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்