கோவையில் வசித்து வந்த மாவோயிஸ்ட் டேனிஷை பாலக்காடு மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலைப்பகுதிகளில் நக்சல் தடுப்பு போலீஸாரான தண்டர்போல்ட் போலீசாரும் கேரள போலீசாரும் இணைந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
![Maoist](http://image.nakkheeran.in/cdn/farfuture/Tfg-7HE2H0ck-J1qB_mEJ8KH-XMEWP_-7ApTSR0eQ3I/1538813862/sites/default/files/inline-images/bc5550ad-0d2e-4c83-8baf-6bbe214f2d2d.jpg)
இப்படி நடந்துவரும் தேடுதலில் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை அகழி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வக்குமாரின் மகன் டானிஷ்(29) என்பது தெரியவந்துள்ளது .இவர் கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவர் ராமநாதபுரம் அருகே உள்ள சடையப்பர் தேவர் வீதி கணேசபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.