![“Manimandapam thiru.v.k.” - TR Balu MP](http://image.nakkheeran.in/cdn/farfuture/N8FylRQvI3WaFNQvMKRSGyh_cozh2m1XJejhCZTuq5g/1693032178/sites/default/files/inline-images/th_4625.jpg)
தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. திரு.வி.க.வின் பிறந்தநாள் விழாவையொட்டி போரூரை அடுத்த துண்டலம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலைக்கு தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் மதுரவாயல் எம்.எல்.ஏ. காரம்பாக்கம் கணபதி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு திரு.வி.க.வுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.ஆர். பாலு எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது; “திரு.வி.க.வின் 140 ஆவது பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரு.வி.க.விற்கு இந்த பகுதியில் மணிமண்டபம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மணிமண்டபம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்ற நல்ல செய்தி வரும். ஒடிசா ரயில் விபத்து சம்பவத்துக்குப் பிறகு ரயில்வே பாதுகாப்பு குறித்து மூன்று மாதங்களைக் கடந்தும் அது குறித்து மத்திய அரசாங்கம் பேசவில்லை. நீட்டுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். இந்த விஷயத்தில் ஆளுநர் பண்பு இல்லாதவராக உள்ளார்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி 11வது வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் நொளம்பூர் ராஜன், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.