கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து பொதுமக்களை காத்துக்கொள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மே 3 வரை அமலில் உள்ள நிலையில், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் வெளிமாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு வரமுடியாத சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேர், கர்நாடக மாநிலம், மாண்டியாவில் தங்கிக்கொண்டு அங்கேய வேலைசெய்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென போடப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு ஏப் 14 ல், முடியும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தனர். மேலும் இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து 18 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் தவித்துபோன, இந்த 12 பேரும் எப்படியாவது நமது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என முடிவு எடுத்து கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் இருந்து தமிழ்நாடு மாநிலம் தட்டக்கரை வரை சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துள்ளனர்.
இப்படி வந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம், தட்டக்கரை செக்போஸ்ட்டில் பாதுகாப்பில் இருந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் பிடித்து விசாரிக்கையில் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் எனவும், இந்த ஊரடங்கு உத்தரவில் நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு போக வேண்டும், அதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததாகவும் தொரிவித்தனர். அதனை அடுத்து அவர்கள் 12 பேரும் தட்டக்கரையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று சம்பவ இடத்திற்கு வந்த சுகதாரத்துறையினர் அவர்கள் அனைவரையும் பரிசோதித்ததில், அவர்களுக்கு கரோனா தொற்று எதுவும் இல்லை என்பதை ஊறுதிபடுத்தினர். இந்த சம்பவம் மீண்டும் கலெக்டர் கதிரவன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உத்தரவின் பேரில், நேற்று இரவு தட்டக்கரையில் இருந்து பாதுகாப்பாக, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.