Skip to main content

காதலித்து மணம் செய்த மனைவியை விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் கைது...

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

The man who left his wife and fell in love and got married for the second time has been arrested ...

 

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது ஈ.மண்டகப்பட்டு. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 29. அதே ஊரைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் சக்திவேல் வயது 29. இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த மறுநாள் காலை வீட்டில் இருந்து சென்ற சக்திவேல் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. 

 

தனது காதல் கணவர் திருமணம் முடிந்த மறுநாள் முதலே காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கீதா பல்வேறு இடங்களில் தேடி பார்த்துவிட்டு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், என்னை காதல் திருமணம் செய்து என் கணவர் என்னை விட்டுவிட்டு ஈ.மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்த விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 21 என்பவரை  இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 

 

முதல் மனைவி நான் உயிரோடு இருக்கும்போதே என்னை ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட என் கணவர்  சக்திவேல் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். 

 

அவரது புகாரின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார், அவரது காதல் கணவர் சக்திவேல், விமலா, சக்திவேலின் தந்தை பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர். குமார் என்பவரை தேடி வருகின்றனர். காதலித்து கரம்பிடித்த முதல் மனைவி இருக்க இரண்டாவது திருமணம் செய்த சக்திவேலும் அவரது உறவினர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.