சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீஃப், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்!
![madras iit student fathima incident dmk president mk stalin tweet](http://image.nakkheeran.in/cdn/farfuture/sgl60C5HopE_R0ZcJ6_ODne6cCTQMolAdWKkoudy0zs/1573829528/sites/default/files/inline-images/stalin%20tweet.jpg)
![mk stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/EUYN7pbD6Bl47qXafwZOPRdtPVDOhEHhc7RpxxjuEnk/1573829573/sites/default/files/inline-images/stalin5553333888888.jpg)
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது! இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.