Skip to main content

வாக்குகளை எண்ணும் ஊழியரை தாக்கியதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27- ஆம் தேதி மற்றும் 30- ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
 

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில், இரவு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

vote counting stop on salem district attur


இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக வேட்பாளர் முன்னணியில் இருப்பதாக அதிகாரிகள் கூறியதால் அதிமுக மற்றும் கூட்டணியினர் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் வாக்குகளை எண்ணும் ஊழியரை தாக்கியதை அடுத்து ஊழியரின் மண்டை உடைந்ததாக தகவல் கூறுகின்றனர். இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 


 

சார்ந்த செய்திகள்