Published on 04/01/2020 | Edited on 04/01/2020
திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ந்தேதி காலை முடிந்துள்ளது. 34 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 24 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. 9 இடங்களை மட்டும்மே அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இன்னும் ஒரு வார்டுக்கான ரிசல்ட் அறிவிக்கவில்லை.

அதில் எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் பெரும் மாறுதல் எதுவும் கிடையாது. தற்போதைய நிலையில் 24 இடங்களை திமுக கூட்டணி பிடித்துள்ளதால் திமுகவை சேர்ந்த ஒருவர் எந்த இழுபறியும் இல்லாமல் மாவட்ட சேர்மன் ஆகுவார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை சேர்மனும் திமுகவை சேர்ந்தவரே தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடதக்கது.