பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உாிமை சட்டத்தின் படி அனைத்து பள்ளிகளும் அரசு அங்கிகாரம் பெற்றே செயல்பட வேண்டும். ஆனால் குமாி மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டு 18 சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கிகாரம் இன்றி செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் நாகா்கோவில் கல்வி மாவட்டத்தில் ஜஇஎல்சி பப்ளிக் பள்ளி, கோட்டவிளை சீயோன் காா்டன் ஆரோக்கிய அன்னை பள்ளி, கொட்டாரம் டாக்டா் அப்துல்கலாம் பள்ளி, குழித்துறை கல்வி மாவட்டத்தில் இணையம் புத்தன் துறை புனித மோி பள்ளி, தொலையாவட்டம் புனித தேவமாதா பள்ளி, காரோடு ஏஞ்சல் குளோபல் பள்ளி.
இதே போல் தக்கலை கல்வி மாவட்டத்தில் மாம்பழத்தாறு கிரீன் வேலி இன்டா்நேஷனல் பள்ளி, கண்ணாட்டுவிளை குளோபல் பப்ளிக்பள்ளி, சேரன்மங்கலம் கோல்டன் பள்ளி, கூட்டுமங்கலம் ஷீரடி பாபா வித்யாகேந்த்ரா பள்ளி, பாா்வதிபுரம் விண்மீன் பள்ளிக் பள்ளி. மேலும் திருவட்டாா் கல்வி மாவட்டத்தில் ஆனையடி சான்ட்றோ சிபிஎஸ்இ பள்ளி, அணைக்கரை மோி மவுண்ட் பள்ளி, கழுவன் திட்டை நேஷனல் பப்ளிக் பள்ளி, கணபதிபுரம் பத்மலாயா வித்யாஸ்ரீ பள்ளி, கோழிவிளை இசிஐ பப்ளிக் பள்ளி, களியக்காவிளை நோபிள் பப்ளிக் பள்ளி, சூழல் புஷ்பகிாி லிட்டில் பிளவா் சென்டிரல் பள்ளி ஆகிய பள்ளிகள் அடங்கும்.
இந்த பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் அரசால் நடத்தப்படும் பொதுத்தோ்வுகள் எழுத இயலாத நிலை ஏற்படும். மேலும் அந்த பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களும் தகுதியற்றதாக கருதப்படும். எனவே பெற்றோா்கள் இந்த பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை சோ்ப்பதை தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா கேட்டுள்ளாா்.
இதற்கிடையில் இந்த பள்ளிகளில் பல ஆயிரம் ருபாய் பணம் கட்டி பல பெற்றோா்கள் தங்களின் பி்ள்ளைகளை சோ்த்துள்ளனா். கலெக்டாின் இந்த அறிவிப்பு அந்த பெற்றோா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை கலெக்டா் மாணவர் சோ்க்கைக்கு முன் கோடை விடுமுறையில் அறிவித்திருந்தால் பிள்ளைகளை அங்கிகாரம் உள்ள பள்ளிகளில் சோ்த்திருப்போம் என்றனா்.