


Published on 05/03/2022 | Edited on 05/03/2022
எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமையன்று (மார்ச் 5) வள்ளுவர் கோட்டம் அருகே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. தலைவர் கி.நடராஜன், சி.ஐ.டி.யு. தலைவர் அ.சவுந்தரராசன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம், எல்.ஐ.சி. ஊழியர் சங்க தலைவர் எஸ்.ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.