Skip to main content

சகோதரியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான சகோதரர் - போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

Published on 25/12/2018 | Edited on 25/12/2018
g


சகோதரியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான சகோதரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வபுரம் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் கார் ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் மகளும், டிப்ளமோ படிக்கும் மகனும் உள்ளனர். இந்நிலையில் டிப்ளமோ படிக்கும் சகோதரன் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தனது சகோதரிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியலுக்கு ஆட்படுத்தி உள்ளார். 

 

இந்நிலையில்  மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளதாக தெரிகிறது. இத்தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரிய வந்ததை அடுத்து மாணவியிடம் அதிகாரிகள் பேசியுள்ளனர். ஆனால்  மாணவி கர்ப்பத்திற்கு காரணமானவர் பற்றி கூற மறுத்துவிட்டார். அவர்களது பெற்றோர்களும் புகார் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து மாணவி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

 

ஆனால், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில்,  காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதில் அவரது சகோதரர் தான் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கற்பழித்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து செல்வபுரம் போலிசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரது சகோதரரை தேடி வருகின்றனர். சகோதரனே தன் சொந்த சகோதரியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த சம்பவம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்