குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பதவி விலக கோரி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலத்தில் ஸ்டாலின் தலைமையிலும், திருச்சியில் மாவட்ட செயலாளர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய கே.என்.நேரு பேசிய குட்கா பிரச்சனையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் விஜயபாஜஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுப்போம். அண்ணா பிறந்தநாளின் போது அ.தி.மு.க. அ.மு.மு.க. போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினார்கள். எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் போக்குவரத்துக்கு நெருக்கடி கொடுத்த அந்த கட்சியனர் மீது நடவடிக்கை இல்லை. கட்அவுட் மற்றும் ஊர்வலங்கள் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் காவல்துறை அதிமுகவினர் என்ன செய்தாலும் கண்டு கொள்வதில்லை.
கடந்த எம்பி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை கரூர் தவிர எங்கும் சென்றதில்லை. இப்போது மணப்பாறை, விராலிமலை, வேடசந்தூர் பகுதியில் போலீஸ் பாதுகாப்போடு பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார். அந்த தம்பிதுரை, திமுகவும், பாஜகவும் ரகசிய உறவில் உள்ளதாக கூறுகிறார். அவர் தி.மு.க.விடம் உள்ள சிறுபான்மையினர் ஒட்டை பிரிக்கவே அவர் இப்படி பேசினார். மத்திய மந்திரி கிடைக்காத விரத்தியில் பி.ஜே.பியை பழிவாங்கவே அவர் இப்படி தொடர்ந்து பேசி வருகிறார். அவர் சொல்வது உண்மை என்றால் திருச்சியில் எங்கள் தலைவர் ஸ்டாலினை திருச்சியில் விமானநிலையத்தில் மற்றும் விமானத்தில் சந்தித்து பேசினார். இதனால் தி.மு.க.வுடன் தம்பிதுரைக்கு தொடர்பு என்று சொன்று சொல்லி விட முடியுமா? என்று போகிற போக்கில் புதுக்கோட்டையில் டி.டி.வி. தினகரன் தன்னை விஜயபாஸ்கர் சந்தித்தார் என்று சொன்னதை போன்று ஸ்டாலின் - தம்பிதுரை சந்திப்பை சொல்லிவிட்டு சென்றார் கே.என்.நேரு.
அண்ணா பிறந்தநாள் விழாவில் தி.மு.க.வை விட அ.தி.மு.க.வினரும், தினகரன் அணியினரும் பிரமாண்டமான கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் தி.மு.க.வின் சார்பில் குறைந்த அளவிலே கலந்து கொண்டர். இதனால் கூட்டத்தை ஏற்பாடு செய்த நகர செயலாளர் அன்பழகனை பயங்கரமாக கடிந்து கொண்டார். ஆனால் இன்றைக்கு நடந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கில் கூடி ஆர்பாட்ட பகுதியை திக்குமுக்காட வைத்து விட்டனர்.