Published on 19/11/2020 | Edited on 19/11/2020

ரஷ்ய தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி, மாஸ்கோவில் மறைவுற்றார். வால்காவோடு வைகையை இணைத்தவருக்கு எங்கள் புகழ் வணக்கம். இது ஈடுசெய்தாக வேண்டிய இழப்பு. செய்தால்தான் துப்யான்ஸ்கியின் உயிர் ஓய்வுறும். யார் முன்வரினும் எங்கள் உறுதுணையும் உறுபொருளும் உண்டு' என்று குறிப்பிட்டுள்ளார்.