Published on 14/03/2019 | Edited on 14/03/2019

கதிர் ஆனந்த்துக்காக வாட்ஸ் அப்புகளில் அவரது ஆதரவாளர்களால் பகிரப்பட்டு வரும் படம்.
வேலூர் எம்.பி. தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் களமிறங்க காய் நகர்த்துகிறார். இதற்காக தோழமைக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் துரைமுருகன்.
ஆனால் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர், காட்பாடி தாண்டி கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளபாத கதிர் ஆனந்துக்கு தலைமை எப்படி சீட் தரலாம் என கொடி பிடித்திருப்பது, துரைமுருகன் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.