Skip to main content

ஆபாச படமெடுத்து மிரட்டல்; ஹார்ட்டின் காட்டிய காசிக்கு ஆயுள் தண்டனை 

Published on 14/06/2023 | Edited on 15/06/2023

 

nn

 

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைப் போன்று 2020ல் தமிழகத்தை உலுக்கியது நாகர்கோவில் காசியின் பாலியல் வழக்கு. கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம் பெண்கள், வசதியான குடும்ப பெண்கள் என 90க்கும் மேற்பட்ட பெண்களிடம்  முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருங்கிப் பழகி அதை வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தைக் கறந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான் காசி.

 

கோழிக்கடை நடத்தி வரும் கணேசபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி, அம்பானி ரேஞ்சுக்கான ஆடம்பர வாழ்க்கையைப் பலர் ஆச்சரியத்துடன் தான் பார்த்தனர். இந்த நிலையில் தான் அந்த கள்ளப் பூனை காசிக்கு சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவா் மணி கட்டி சிறைக்குத் தள்ளினார். காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தர முன்வராத நிலையில் அந்த பெண் மருத்துவர் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி நாகர்கோவில் எஸ்.பி ஸ்ரீநாத்துக்கு மெயில் மூலம் புகார் கொடுத்தார். பின்னர் 2020 ஆம் ஆண்டு காசி கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்ஃபோன் மற்றும் ஹார்ட்டிஸ்க்கில் அவனால் சீரழிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள், படங்கள் இருந்தன. 120 பெண்கள், 400 வீடியோக்கள், 1,900 ஆபாசப் படங்கள் அவரது லேப்டாப்பில் கைப்பற்றப்பட்டது .

 

இதையடுத்து தீவிரமடைந்த அந்த வழக்கு, பின்னர் மேலும் 5 பெண்கள் காசி மீது புகார் கொடுத்தனர். மாதர் சங்கத்தினரின் போராட்டங்களால் காசியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. விசாரணையின் பொழுது தெனாவெட்டாக காசி ஆர்ட்டின் காட்டியது அந்த நேரத்தில் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில் பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்