சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் பணிகளை செய்து முடித்துள்ள காங்கிரஸ் கட்சி கார்த்திக் சிதம்பரம், தற்போது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொகுதிகளை வலம் வரத் தொடங்கி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆங்காங்கே திரண்டிருந்த வாக்காளர்களிடம் அவர் பேசும் போது.. ஆலஙகுடி தொகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை ஒரு முறை கூட பார்க்க வராத மோடி ஆறுதல் அறிக்கை கூட விடாத மோடி அரசு அகற்றப்பட வேண்டும். போதிய நிவாரணம் கொடுக்காத அரசுகள் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் போது அனைத்து விவசாய கடன்களும் ரத்து செய்யப்படுவதுடன் புயலால் பாதிக்கப்பட்டு ஒடிந்த மரங்களுக்கு மட்டுமின்றி தற்போது நிற்கும் மரங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். அதனால் 2 மாதங்கள் வரை விவசாய கடன்களை யாரும் கட்டாதீங்க.

நீங்கள் விரும்பாத எந்த திட்டமும் இங்கே செயல்படுத்தப்படமாட்டாது. அதாவது ஹைட்ரோ கார்ப்பன் திட்டம் அகற்றப்படும். அதே போல மக்கள் விரும்பும் காவிரி குண்டாறு திட்டம் செயல்படுத்தப்படும். என்று பேசிக் கொண்டிருக்கும் போது வழக்கு போடுறாங்க என்றனர் கூட்டத்தில்.. நாங்க பார்க்காத வழக்குகளா? அதை எல்லாம் சமாளிப்போம் என்றார். கேபிள் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். அதை குறைப்போம். நெடுவாசல் பகுதிக்கு புதிய வங்கி திறந்து புதிய சுயஉதவிக்குழு கடன், கல்விக்கடன் வழங்கப்படும். 100 நாள் வேலையை கொண்டு வந்த நாங்கள் அடுத்து 150 நாள் வேலை கொடுப்போம். ஆனால் பா.ஜ.க அரசு வேலை செய்தவர்களுக்கு கூலி கூட கொடுக்கல.
பா.ஜ.க என்பது மதவாத வைரஸ். அந்த வைரசை ஊருக்குள் விட்டுவிடாதீர்கள். அதனால் பெரிய தீங்கு தான் ஏற்படும் என்றார்.