Skip to main content

மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஒரு விரல் புரட்சி

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

 

தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியதும் ஒரு விரல் புரட்சியும் வேகமாக பரவுகிறது. ஒவ்வொரு நாளும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்து வருகிறது.
    

m

 

இந்த நிலையில் தான் கந்தர்வகோட்டையில் முனியாண்டி என்கிற 60 வயது முதியவர் என் வாழ்நாளில் ஒரு ஓட்டாவது போட ஆசைப்படுகிறேன். என்னை வாக்காளர் பட்டியலில் சேருங்கள் என்று 20 வருடமாக போராடி வருகிறார்.  கடைசியாக கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பாரி வைத்து மனு கொடுத்தார்.


  இது ஒரு பக்கம் இருந்தாலும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சுற்றிலும் மாணவர்கள் நின்று ஒரு விரல் புரட்சிக்கு வடிவம் கொடுத்துள்ளனர்.


   இப்படி ஒரு விரல் புரட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலையில் பல தேர்தல்களாக ஒருவர் சொந்த செலவில் மலேசியாவில் இருந்து வந்து ஓட்டும் போடுகிறார். இவரது இந்த புரட்சியை பார்த்து பலர் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள் வாக்களிக்க.
 

சார்ந்த செய்திகள்