Skip to main content

கள்ளக்குறிச்சியில் 5 கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா!!!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020
k

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 15 நபர்களுக்கு கரோனா நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இந்த நிலையில் நேற்று மேலும் 6 பேருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  அதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே  19 வயது பெண்,  கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண் பூ.மலையனூரை சேர்ந்த 28 வயது பெண், கிழக்கு மருதூரை சேர்ந்த 32 வயது பெண், டி.ஓரத்துறையை சேர்ந்த 22 வயது பெண் என மேற்படி ஐந்து பெண்களுக்கும் கடந்த இரண்டாம் தேதி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களோடு சேர்த்து திருநாவலூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.  இதில் மேற்கண்ட ஆறு நபர்களுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த ஆறு நபர்களும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி ஆறு நபர்களின் கிராமங்களுக்கு சென்று வரும் சாலைகள் அனைத்தும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது. அந்த கிராமங்களில் கிருமி நாசினிகள் மருந்துகள் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

 

 


கரோனா பாதிக்கப்பட்ட ஆறு நபர்களில் பெண்கள் ஐந்து பேர்களும் கர்ப்பிணி பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நோய்தொற்று எண்ணிக்கை 15லிருந்து 21 ஆக உயர்ந்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்