போடி பகுதியில் மூன்று மகள்களுடன் விஷம் குடித்ததில் இரு மகள்கள் பலியானதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாயும் பலியானார்.
போடி காந்தி நகரில் வசித்து வந்த பால்பாண்டி தம்பதிக்கு லட்சுமிக்கு அனுசியா, ஐஸ்வர்யா, அட்சயா என்ற மூன்று பெண்கள், இவர்கள் சென்னையில் அரிசி வியாபாரம் செய்து வந்தனர். அந்த அரிசி வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில வருங்களுக்கு முன்பு சொந்த ஊரான போடிக்கு வந்தனர்.
இந்த நிலையில் தான் திடீரென பால்பாண்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து லட்சுமி தன் மூன்று பிள்ளைகளையும் காப்பாற்ற தையல் வேலை செய்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் மேலும் தையல் வேலையில் போதுமான வருமானம் கிடைக்காததால் உறவினர்கள் அவ்வப்போது உதவி செய்து வந்தனர். இருந்தாலும் தன் பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. எப்படி மூன்று பிள்ளைகளையும் காப்பாற்ற போறேனோ என்ற மன வருத்தம் தொடர்ந்து லட்சுமி மனதில் இருந்து வந்தது.
இந்த நிலையில்தான் கடந்த 3-ம் தேதி அதிகாலையில் டீ வாங்கிட்டு வந்த லட்சுமி அந்த டீயில் விஷத்தை கலந்து மூன்று மூன்று பெண் பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து விட்டார். இந்த விஷயம் அக்கம்பக்கத்தில் தெரியவே உடனடியாக லட்சுமி, அனுசியா, ஐஸ்வர்யா, அட்சயா ஆகிய நான்கு பேரையும் போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அனுசியா ஐஸ்வர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிந்தது. அதை தொடர்ந்து லட்சுமியையும் மூன்றாவது மகள் அட்சயாவையும் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் நேற்று லட்சுமியின் உடல் நலத்தில் எந்த ஒரு முன்னேற்றம் ஏற்படாததால் திடீரென இறந்துவிட்டார். இப்படி ஒரே குடும்பத்தில் வறுமையின் காரணமாக தாய் உள்பட இரண்டு மகள்கள் இறந்ததைக் கண்டு போடி பகுதி சோகத்தில் மூழ்கியது. அதுபோல் தனது தாய் லட்சுமியும் உடன் பிறந்த சகோதரிகள் அனுசியா, ஐஸ்வர்யா என குடும்பத்தில் உள்ள மூன்று பேருமே இறந்ததை கண்டு அட்சயா தனிமையாக்கப்பட்டு இருப்பதை கண்டு பொதுமக்களும் மனம் வாடினர்.