![kalaignar](http://image.nakkheeran.in/cdn/farfuture/r6N2bbXDO-Q5uG9NiLFQpddgB_AABtR7fCIWJkMr3BU/1533747948/sites/default/files/inline-images/5006.jpg)
திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள திமுக தலைவர் கலைஞரின் தாயார் நினைவகத்தில் பெண்கள் கதறி அழுது கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதோபோல் திருவாரூரில் திமுக தலைவர் கலைஞர் படித்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலைஞரின் மறைவையொட்டி அவரது திருவுரு படத்திற்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். கலைஞர் இறப்பு என்பது தமிழுக்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பாகும் என கண்ணீர் மல்க ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அதேபோல் திமுக தலைவர் கலைஞரின் தயார் நினைவகம் இருக்கும் காட்டூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள், அனைத்து கட்சியினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய வீதிகளில் அமைதி ஊர்வலம் சென்று கலைஞரின் தாயார் நினைவகத்தில் கலைஞரின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னார் கலைஞரின் மறைவை தாங்கி கொள்ள முடியாத பெண்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கதறி அழுதனர். இதனால் அந்த பகுதி சோகமயமானது.
மேலும்திருவாரூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பு திமுக தலைவரும் திருவாரூர் எம்எல்ஏவான கலைஞரின் திருவுருவபடத்திற்கு பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.