







Published on 16/11/2018 | Edited on 17/11/2018
கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இதுவரை 23 பேர் தமிழகத்தில் கஜா புயலுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கஜா புயலால் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளது நாகை மாவட்டம் வேதாரண்யம். முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ளது வேதாரண்யம்.
வேதாரண்யம் பகுதியில் உள்ள வண்டல், தலைஞாயிறு உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்த கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.