Published on 27/08/2018 | Edited on 27/08/2018
![e](http://image.nakkheeran.in/cdn/farfuture/Bc7isYh4BX_Gv8Ib0AWShoIxIp0IBkeWeXt7X6Tu7K8/1535407118/sites/default/files/inline-images/erode%20press.jpg)
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபாகர் மூன்று ஆண்டுகள் 11 மாதம் இந்த பொறுப்பில் இருந்தார். தற்போது பிரபாகர் கிருஷ்னகிரி மாவட்ட ஆட்சியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் வருகிற 23ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளராக பொறுப்பேற்கிறார்.
ஏறக்குறைய 4 ஆண்டுகள் ஈரோடு கலெக்டராக இருந்த பிரபாகர் ஐஏஎஸ் -க்கு இன்று (27/8/18) மாலை ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக பாராட்டு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் (திஹிந்து தமிழ்) சங்க செயலாளர் ஜீவாதங்கவேல் (நக்கீரன்), பொருளாளர் R.ரவிச்சந்திரன் செயற்குழு உறுப்பினர்கள் த.சன்முகம், தினகரன் மகேந்திரன் உட்பட 50 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.