பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க ஒரு பரிந்துரை குழு அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கடம்பூர்.ராஜூ இன்று அறிவித்தார்.
அப்போது இதற்கு நன்றி தெரிவித்து பேசிய மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி, நானும் ஒரு பத்திரிகையாளன் என்பதால் இது குறித்து தான் இருமுறை இந்த அவையில் பேசியிருப்பதாகவும், இப்போது இக்கோரிக்கையை நிறைவேற்றிய தற்காக தமிழக அரசுக்கும், செய்தித்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இத்துடன் விரைவில் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
பிறகு சபை முடிந்ததும், வெளியே வந்த அமைச்சர் கடம்பூர்.ராஜூ, ''நீங்கள் தான் இந்த கோரிக்கையை முதலில் இந்த அவையில் வைத்தீர்கள்'' என்று தன்னிம் நினைவூட்டி பாராட்டியதாக தெரிவித்துள்ளார் தமிமுன் அன்சாரி.