Published on 13/02/2019 | Edited on 13/02/2019

கடந்த மாதம் 22ம் தேதி முதல் 30ம் தேதிவரை ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில், பங்குபெற்ற 1,111 ஆசிரியர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்களை பணியிடைநீக்கம் செய்ததை ரத்துசெய்யவேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.