முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (16/09/2020) பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்களை அந்ததந்த துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதன்படி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்க சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைப்பதற்கான மசோதாவையும் பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா, இன்று சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரச் சட்டம் மூலம் இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதாவும், ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைப்பதற்கான மசோதாவும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து 3 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.