திமுக தலைவர் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று தற்போது காவேரி மருத்துவமனைக்கு வந்த வைகோ கலைஞர் உடல்நலம் பற்றி விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எந்த மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் கலைஞர் உடல் நலம் தேறி வருவது வியப்புக்கூறிய ஒன்றாகும். எந்த குரலுக்காக மக்களும் தொண்டர்களும் காத்திருந்தாரோ அத்தகைய குரலை மீண்டும் அவர்கள் கேட்பார்கள் என நம்புகிறேன்.
ஸ்டாலினை எந்த இடத்தில் வைத்துப் பார்க்க மக்களும் நாங்களும் விரும்புகிறோமோ அந்த இடத்தில் வைத்து பார்ப்பதற்காக கலைஞர் மீண்டு வருவார் எனக்கூறினார்.
மேலும் தற்போது தான் இங்கு இருக்கக்கூடிய தொண்டர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அதே மகிழ்ச்சியில் தானும் செல்வதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.