Skip to main content

உலக மகளிர் தினம்; மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
International Women's Day; Metro Rail Corporation is a new initiative

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்குத் தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சர்வதேச மகளிர் தினத்தன்று, பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த பிரத்யேக மகளிர் உதவி எண் 155370ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

மகளிர் உதவி எண் 155370 என்பது 24 மணி நேரமும் (24/7) பெண்களால் இயக்கப்படும் சேவையாகும். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண் பல சேவைகளை வழங்குகிறது. இதில் அவசரகால பதில் தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது, இந்த உதவி எண் பி.எஸ்.என்.எல். (BSNL) நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

அனைத்து பெண் பயணிகளும் மகளிர் உதவி எண் 155370ஐ தங்கள் தொலைபேசியில் சேமித்து, சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது தேவை ஏற்பட்டால் தயங்காமல் அதைப் பயன்படுத்துமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்