Published on 09/08/2019 | Edited on 09/08/2019
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 9,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில், இந்த வெற்றி திமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த வெற்றியை அவருக்கு காணிக்கையாக செலுத்துகிறோம் எனக்கூறினார்.