
தமிழகத்தில் தொடர்ச்சியாக பல இடங்களில் ரவுடிகள் வெட்டி படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் மதுரை தல்லாகுளம் பகுதியில் காளீஸ்வரன் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். காளீஸ்வரன் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸை மறித்து அவருடைய ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவத்தால் மதுரையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காளீஸ்வரன் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனக்கன்குளம் பகுதியில் இருதரப்பு மோதல்கள் உள்ள நிலையில் காளீஸ்வரன் கொலையால் மதுரையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், அதேபோல சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் என்பவர், காரைக்குடியில் மனோஜ் என்கின்ற ரவுடி என நிகழ்ந்த படுகொலைகள் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இன்று நேற்று நள்ளிரவு மதுரை தல்லாகுளத்தில் நிகழ்ந்த இந்த படுகொலையும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.