Skip to main content

பிறந்த குழந்தையோடு காதலன் வீட்டுவாசலில் தர்ணாவில் மாற்றுத்திறனாளி பெண்; நாகை மாவட்டத்தில் பரபரப்பு

Published on 27/11/2019 | Edited on 27/11/2019


பிறந்த குழந்தையோடு மாற்று திறனாளி பெண்ணை ஏமாற்றிவிட்டு தலைமறைவான காதலன் வீட்டு முன்பு  குழந்தையோடு பாதிக்கபட்ட பெண்ணும் அவருக்கு ஆதரவாக கிராம மக்கள் சிலரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

incident in nagai

 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வீரபெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தீனா. மாற்று திறனாளி பெண்ணான இவர் அதேபகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த ஆண்டு தீனா கர்ப்பமானார். இதனை மருத்துவ பரிசோதனையில் தெரிந்துகொண்ட தீனாவின் பெற்றோர்கள் ஐயப்பனின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்துகொள்ள முறையிட்டுள்ளனர்.

 

incident in nagai


ஆனால் தீனாவை திருமணம் செய்துகொள்ள ஐயப்பன் மறுக்கவே, அவர் மீது நாகை அனைத்து மகளிர் காவல்நிலையம், நாகை டி.எஸ்.பி, நாகை எஸ்.பி அலுவலகம், உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த பிரச்சனையை கடந்த 10 மாதங்களாக நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி இரு தரப்பையும் அழைத்து பஞ்சாயத்து செய்து வந்துள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரையிலும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதற்கிடையில் தீனா பிரசவித்தார், 18 நாட்கள் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய பாதிக்கபட்ட பெண்ணான தீனா பெற்ற குழந்தையுடன் காதலனான ஐய்யப்பன் வீட்டு வாசலில் 100 க்கும் மேற்பட்ட கிராம மக்களோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

incident in nagai


"ஐயப்பனின் உறவினர்கள் 3 பேர் காவல் துறையில் பணிபுரிவதால்தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை," என்று கூறுகிறார் பாதிக்கபட்ட பெண்ணான தீனா.

 

incident in nagai

 

"இருவரும் வெவ்வேறு சாதியை செரந்தவர்கள் என்பதாலும், மாற்று திறனாளி என்பதாலும் ஐயப்பன், தீணாவை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். வீட்டை பூட்டிவிட்டு தலை மறைவாக இருக்கும் ஐயப்பன் மற்றும் அவரது பெற்றோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் வேண்டும்," என்கிறார்கள் கூடியிருந்த கிராம மக்கள். 

 

சார்ந்த செய்திகள்