
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு பிப்.15ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தண்டனை காலம் முடியப்போகிறது.
இந்நிலையில் வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் எனத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து வரும் பிப்.5ஆம் தேதி இளவரசி விடுதலையாக இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சுதாகரன் இன்னும் அபராத தொகையான ரூ.10 கோடியைக் கட்டாததால் அவரது விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டதால் அவர்கள் இருவரும் விடுதலை ஆகிறார்கள் என்றும் விடுதலைக்கு முன் நடக்கும் வழக்கமான நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.