Published on 08/10/2022 | Edited on 08/10/2022
பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மது அருந்தி பணியாற்றினால் பணிநீக்கம் செய்யப்படுவர் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓட்டுநர்கள், நடத்துநர்களில் சிலர் மது அருந்திவிட்டு பணியாற்றுவதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள, அரசு விரைவு போக்குவரத்து கழகம், அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திய நிலையில் பணியாற்றுவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்று ஓட்டுநர், நடத்துநர் மது அருந்திவிட்டு பணியாற்றினால் நம்பிக்கை குறைந்து அரசு பேருந்தில் பயணிப்பதை பயணிகள் தவிர்க்க வாய்ப்பு உள்ளது. எனவே மது அருந்தி பணியாற்றினால் போலீஸ் நடவடிக்கையுடன் அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.