போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செயய்யப்பட்டது. இன்று நீதிபதி கிருபாகரன் தலைமையில் நடந்த விசாரணையில் தங்கள் நிலையை ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் எடுத்துவைத்தனர். மேலும் தங்களுடன் முதல்வர் பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் வாங்க தயார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில், 90 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாகவும், நீதிமன்ற வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவர வேண்டும்.தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஓய்வூதிய திட்ட பிரச்சனையை ஆராய ஸ்ரீதர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது.