Skip to main content

“வாங்க டீ வாங்கித் தர்றேன்...” - அசால்ட்டாக சிறார்களைக் கடத்திய பெண்; துரிதமாக மீட்ட போலீசார்

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

"I will buy tea..." - Woman who assaulted minors; The police responded quickly

 

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த சிறுவன், சிறுமி பெண் ஒருவரால் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் தற்போது இரண்டு சிறார்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.

 

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கடந்த ஒன்பதாம் தேதி மூர்த்தி என்பவர் தனது மனைவி காமாட்சியின் பிரசவத்திற்காக வந்திருந்தார். இருவரும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். பிரசவத்திற்காக வந்திருந்த இருவரையும் உறவினர்கள் பார்த்துவிட்டுச் சொல்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் மூர்த்தியின் அண்ணன் மற்றும் தம்பியின் மகன் மற்றும் மகள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்பொழுது அங்கு இருந்த லட்சுமி என்ற பெண் சுமார் ஏழு மணி அளவில் சிறுவன் சிறுமியுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். மருத்துவமனையில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அப்பெண் குழந்தைகளின் உறவினர் என நினைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென இரண்டு குழந்தைகளையும் லட்சுமி கூட்டிச் சென்றுள்ளார். டீக்கடைக்குச் சென்ற மூவரும் வரவில்லை.

 

குழந்தைகளைக் காணவில்லை எனப் பெற்றோர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தில் மற்றும் வெளிப்புறத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் வாலாஜாபாத்தில் அஞ்சூர் பகுதியில் லட்சுமி வசித்து வருவது தெரியவர, போலீசார் அங்கு சென்று பார்த்தபோது குழந்தைகள் அங்கு இருந்தனர். உடனடியாக போலீசார் சிறார்களை மீட்டனர். அதே வீட்டில் மேலும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். அந்த குழந்தைகளின் பெற்றோர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.