Skip to main content

ஓடும் ரயிலில் 6 கோடியை கொள்ளையடித்தது எப்படி? சிக்கிய குற்றவாளிகளின் பரபரப்பு வாக்குமூலம்!!

Published on 14/10/2018 | Edited on 14/10/2018

 

 

train

 

சேலம் -சென்னை எக்ஸ்பிரஸ் ஓடும் ரயிலில் கடந்த 2016 ஆகஸ்ட் 8-ஆம் தேதி கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பையும், எப்படி ஓடும் ரயிலில் அவ்வளவு பெரிய தொகையை கொள்ளையடித்திருப்பார்கள் என்ற பெரிய கேள்வியையும் ஏற்படுத்தியிருந்தது. தற்போது அந்த கொள்ளை வழக்கில் சிக்கியவர்கள் கொடுத்துள்ள ''எப்படி கொள்ளையடித்தோம்'' என்பது தொடர்பான வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த வாக்குமூலமானது,

 

நாங்கள் சேலம்-சென்னை எக்ஸ்பிரசில் அதிக அளவு பணம் எடுத்து செல்லப்படுகிறது என ஏற்கனவே அறிந்திருந்தோம். எனவே கொள்ளையடிக்க நேரம் பார்த்து காத்திருந்தோம். ரயிலில் பணம் எடுத்து சொல்லப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ள டீ குடிப்பது, பேப்பர் படிப்பது போன்று பல மாதங்கள் சேலம் ரயில் நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் வேவு பார்த்தோம். ரயில் எங்கெல்லாம் நிற்கிறது, எவ்வளவு நேரம் நிற்கிறது, சம்பந்தப்பட்ட பாதையில் சுரங்கங்கள் இருக்கிறதா? இப்படி எல்லா விஷயங்களையும் முன்னரே கணக்கிட்டு வைத்திருத்தோம். 

 

ஒன்று சேர்ந்த ஐந்து பேர்...

 

நாங்கள் ஐந்து பேர் கொண்ட குழுவாக அமைத்து, குழுவின் தலைவன் மெஹர்சிங் தலைமையில் திருட காத்திருந்தோம். அந்த நேரத்தில் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கோடிக்கணக்கில் பணம் எடுத்து செல்வதை அறிந்து கூட்டாக அந்த ரயிலில் ஏறினோம். ரயிலில் ஏறிய பிறகு எப்படி சிக்காமல் கொள்ளை அடிப்பது என்பது தொடர்பான திட்டத்தை இன்னொருமுறை எங்களுக்குள் கலந்து ஆலோசித்துக்கொண்டோம். அதன்பின் ஜன்னல் கம்பிகள் வழியாக ஒவ்வொருவராக ரயிலின் பணமுள்ள பேட்டியின் மேற்கூரையில் ஏறினோம். இரவு என்பதால் பெட்டியின் மேல் பகுதியில் கூட்டாக அமர்ந்திருந்தோம். யூகித்தபடியே வழியில் சுரங்கள் இல்லாது இருந்தது. ரயில் சின்ன சேலம் பக்கத்தில் செல்ல செல்ல மேற்கூரையில் துளையிட ஆரம்பித்தோம். துளையிடுவதில் உருவாகும் சத்தத்தை மறைக்க எப்போதெல்லாம் ரயிலின் எஞ்சின் ஒலி எழுப்புகிறதோ அப்போதெல்லாம் அந்த சத்தத்தை சாதகமாக்கி பலமாக தாக்கி துளையிட்டோம் .

 

train

 

உள்ளே இறங்கிய இரண்டு பேர்...

 

ஒரு ஆள் நுழைவதற்கான அளவுக்கு துளை தயாரானவுடன் ஒன்றன் பின் ஒன்றாக இருவரை உள்ளே இறக்கினோம். உள்ளே சென்ற இருவரும் உள்ளே உள்ள மரப்பெட்டியை உடைத்து தேவையான பணத்தை லுங்கியில் கட்டிக்கொண்டு ஏறினார்கள். இந்த மொத்த திட்டமும் விருத்தாச்சலம் ரயில் நிலையம் வருவதற்குள் முடிந்தது. இறுதியில் விருத்தாசலத்தில் நின்றிருந்த எங்கள் இன்னொரு கூட்டாளியிடம் கொள்ளையடித்த பணத்தை  கொடுத்துவிட்டோம்.

 

train

சிக்கிய மூமென்ட்...

 

இவ்வளவு பணத்தை மாட்டிக்கொள்ளாமல் கொள்ளையடித்து விட்டோம் என சந்தோஷமாக இருந்தோம். அந்த பணம் செல்லாது என அறிந்து பின்னர் ஏமாற்றம் அடைந்தோம். மேலும் பழைய 1000, 500 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் என்ன செய்வது என குழம்பி இருந்தோம். வங்கிக்கு எடுத்து சென்றால் எப்படி இவ்வளவு பணம் என கேட்டுவிடுவார்களோ, போலீஸ் பிடித்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி செலவு செய்துவந்தோம். ஆனால் இப்படி சிக்குவோம் என்று நினைக்கவில்லை.    

சார்ந்த செய்திகள்