மத்திய பாஜக மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதா தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக விஞ்ஞான ஆய்வரங்க அமைப்பு கோவையில் இன்று கருத்தரங்கு ஒன்றை நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் இந்த சட்ட மசோதாவையும், அதன் விளைவுகள் பற்றியும் விளக்கிப் பேசினார். அவர் பேசுகையில்,
"இந்தியா என்பது பன்முக தன்மை கொண்ட நாடு. பல்வேறு மொழி, இனம், கலாச்சாரம், பண்பாட்டைக் கொண்ட மக்கள் வாழும் பூமி இது, மொழியாலும் மதத்தாலும் மக்களை பிரிக்கிற ஒரு பிரிவினை சக்திதான் பாரதிய ஜனதா கட்சி. அந்த கட்சிக்கு தலைமை பீடமாக இருப்பது சங்பரிவார் கூட்டமான ஆர்எஸ்எஸ் அமைப்புதான்.
இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு மத பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு. இதனுடைய நோக்கம் இந்து ராஷ்டிரம் அமைப்பதுதான். அவர்களது இலட்சிய இலக்காக இருப்பது இந்தியாவில் ஒரே தேசம் ஒரே மதம் ஒரே நாடு ஒரே மொழி என்ற குறிக்கோள் தான். அதற்காகத்தான் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசியலமைப்பை மாற்றி எழுதுவது என்ற முனைப்போடு புதிய புதிய செயல்பாடுகளில் இறங்கி உள்ளது.
அதில் ஒன்றுதான் குடியுரிமை திருத்த சட்ட மசோதா, அதேபோல தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இவை இரண்டும் இந்திய மக்களுக்கு பேராபத்தாகும். இதை அனுமதித்தால் பிற்காலத்தில் இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக பாரதிய ஜனதா அறிவிக்கும் அந்த நிலைக்குத் தள்ளப்படும். இது போன்ற செயல்பாடுகளை களைய மாணவர்களும் இளைஞர்களும் தான் கையிலெடுக்க வேண்டும். உங்களின் போராட்டத்தின் மூலமாக தான் இந்திய அரசியலமைப்பை காப்பாற்ற முடியும் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை நிருபிக்க முடியும்."
என நீண்ட விளக்கத்தை கொடுத்தார் வழக்கறினர் பாப்பா மோகன். மேலும் சின்னியம்பாளையம் தியாகிகள் பற்றி அவர்களின் வீர வரலாறு பற்றி வழக்கறிஞர் தோழர் கல்பனார விரிவுரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில் இளைஞர்கள் இளம் பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.