Skip to main content

நான்கு வழிச்சாலைக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

highways toll plaza madurai high court bench order

 

இரு வழிச்சாலைக்கு நான்கு வழிச்சாலைக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

 

பரமக்குடி- ராமேஸ்வரம் வரை 99 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை. புதிதாக சாலை அமைக்கப்படாமல் நான்கு வழிச்சாலைக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு இன்று (02/02/2021) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரு வழிச்சாலைக்கு நான்கு வழிச்சாலைக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அங்கித் திவாரி ஜாமீன் மனு; நீதிபதி அதிரடி உத்தரவு!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Ankit Tiwari Bail Petition; Judge action order

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.  இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட நிதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதாரர் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார் சிங், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்து வழக்கில் இருந்து விலகினார்.  இந்நிலையில் நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (15.03.2024)  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “ஒரே நேரத்தில் உயர் நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில் விசாரணைக்கு தடை வாங்கியுள்ளார். எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Ankit Tiwari Bail Petition; Judge action order!

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “லஞ்ச ஒழிப்புத்துறை,  அமலாக்கத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை ஒரு போதும்  அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்களை சகித்துக்கொள்ள முடியாது.  இதனை வேடிக்கை பார்க்க முடியாது. இதுபோன்ற அதிகாரிகள் லஞ்ச வழக்கில் சிக்கும்போது இரும்பு கரம் கொண்டு  அடக்க வேண்டும்.  அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக் கொள்ள முடியாது.  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Next Story

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Attention Paytm Passtag users

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு  வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.