Skip to main content

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுகிறோம்: டி.என்.சேஷன்

Published on 12/08/2017 | Edited on 12/08/2017
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம்: டி.என்.சேஷன்



முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர், புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் வகையில் சங்கல்ப் என்ற தன்னார்வ அமைப்பு உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஏழைகளாக இருப்பின் இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம். பணம் இருக்கிறது ஆனால் எப்படி சிகிச்சை பெற வேண்டும் என தெரியாதவர்களுக்கு கைட்னஸ் கொடுப்போம். இதற்காக அடையாறு கேன்சர் மருத்துவமனையுடன் டை அப் செய்துள்ளோம். மக்களும் தமிழக அரசும் முடிந்தளவு உதவிகளை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கும்மிடிபூண்டி மற்றும் விழுப்புரத்தில் புற்றுநோய் கண்டறியும் மையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது, மேலும் 3 இடங்களை தேர்வு செய்து வருகிறோம்.  புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நன்கொடை அளிக்கும் விதமாக வருகிற 19 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கேன்சரில் இருந்து மீண்டு வந்தவர்கள் பங்கேற்கிறார்கள். இதுவரை 18 பேருக்கு இலவச கேன்சர் சிகிச்சை செய்துள்ளோம். சங்கல்ப் அமைப்பில் உலகம் முழுவதிலும் இருந்து 28 மருத்துவர்கள், 4 விஞ்ஞானிகள் இருக்கின்றனர் என தெரிவித்தார்.

படம்: செண்பக பாண்டியன்

சார்ந்த செய்திகள்