சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் மாடி பகுதியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட மீட்புப் படையினர், இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதலின் போது அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக என்.ஆர்.சி எனும் தேசியப் பேரிடர் பாதுகாப்புப் படை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில், இதற்கான ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பயிற்சி நடைபெறுகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று காலை, சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் அம்மா மாளிகை பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது போல் பாவித்து ஹெலிகாப்டரில் வந்த தேசியப் பாதுகாப்புப் படையினர் மாடியில் ஹெலிகாப்டரை நிறுத்தி உள்ளே நுழைந்து சிக்கியவர்களை மீட்பது போல் ஒத்திகை நடத்தினர்.