Published on 30/07/2020 | Edited on 30/07/2020
![New Registrar appointed to Annamalai University](http://image.nakkheeran.in/cdn/farfuture/msyjkqAszFTsGkG34NR-tfJgXwfdIi1UFath-Hw65IU/1596048156/sites/default/files/inline-images/sfsgdgdgdg.jpg)
சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றி வந்த பேராசிரியர் கிருஷ்ணமோகன் பதவி காலம் முடிவடைந்த நிலையில் பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவராக பணியாற்றிய பேராசிரியர் ஞானதேவன் புதிய பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.