Published on 27/09/2023 | Edited on 27/09/2023
சென்னையில் பல்வேறு இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் மாநகர் பகுதியான அண்ணா நகர், கோயம்பேடு, சூளைமேடு, ஆலந்தூர், நுங்கம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோன்று வளசரவாக்கம், நெற்குன்றம், மதுரவாயல், ஆழ்வார்திருநகர், ராமாபுரம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
மேலும் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரினா, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையாறு, பூவிருந்தவல்லி, திருமழிசை, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, ஐயப்பன்தாங்கல், குன்றத்தூர், மாங்காடு, கோவூர், முகலிவாக்கம், மவுலிவாக்கம், வேலப்பன்சாவடி, குமணன் சாவடி, போரூர், திருவேற்காடு, அயனம்பாக்கம், வானகரம் உள்ளிட்ட இடங்களிலும் கன மழை பெய்து வருகிறது.