மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நேற்று காலை முதல் வலுவிழக்கத் தொடங்கி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நீடித்ததாகவும அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு சில இடங்களில் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தாலும் மழைக்கான வாய்ப்புகளில் மாற்றமின்றி அதே நிலையில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் பரவலான மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.