சிவகாசியில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு (பெஸோ அலுவலகம்) நிறுவனத்தை நாம் தமிழர் கட்சியினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“அடங்க மாட்டோம்; அடங்க மாட்டோம்; நாம் தமிழர் அடங்க மாட்டோம்! இழுத்து மூடு! இழுத்து மூடு! ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு! அமைத்திடு.. அமைத்திடு.. மேலாண்மை வாரியம் அமைத்திடு! சோறும் வேண்டும்; வயிறும் வேண்டும்; விவசாயி மட்டும் வேண்டாமா? மானங்கெட்ட மோடி அரசே! விவசாயிகளை வஞ்சிக்காதே!”
என்று கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இன்று சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட பா.ம.க. கட்சியினர், கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.