மாட்டின் மீது காட்டிய அக்கறையை மக்கள் மீது காட்டியிருந்தால் இந்த சோகத்தை தடுத்திருக்கலாம்: எஸ்.டி.பி.ஐ
உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் மரணத்துக்கு யோகி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் மாட்டின் மீது காட்டிய அக்கறையை மக்கள் மீது காட்டியிருந்தால் இந்த சோகத்தை தடுத்திருக்க முடியும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 70 குழந்தைகள், ஆக்ஸிஜன் இல்லாததால் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆக்ஸிஜன் இல்லாததால் ஆகஸ்ட் 7ந் தேதி தொடங்கிய குழந்தைகள் மரணத்தை அலட்சியமாக கையாண்டதன் விளைவே இத்தகைய அதிகமான உயிர் பலிக்கு முக்கிய காரணமாகும். பல்வேறு கனவுகளுடன் வளர்த்து வந்த தங்கள் ஆருயிர் குழந்தைகளை இழந்து வாடும் குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தைகளின் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் இல்லாததே காரணம் என்று தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதமே ஏற்பட்டு, கடந்த ஆகஸ்ட் 4 அன்று அவசர சிகிச்சைக்கு கூட ஆக்ஸிஜன் இல்லாத அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில மருத்துவமனை விதிப்படி, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஒரு மாதம்வரை கையிருப்பில் இருக்க வேண்டும் என்கிற விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு சுமார் 67 லட்சம் ரூபாய் வரை பாக்கி வைத்ததால் அந்நிறுவனம் ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளையை நிறுத்தியுள்ளது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 9ந் தேதி இதே மருத்துவமனைக்கு வருகை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தெரிவிக்கப்பட்ட போதும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை வழங்கிய நிறுவனம் முந்தைய அகிலேஷ் அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் என்பதாலேயே சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு யோகி ஆதித்யநாத் அரசு பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. யோகி அரசின் இந்த பாரபட்ச அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கையால் 70 குழந்தைகளின் உயிர்களை பறிபோயுள்ளது.
மாநில அரசு நிர்வாகம், மாநில சுகாதாரத்துறை குழந்தைகள் உயிர் சம்பந்தப்பட்ட விசயத்தில் மிகப்பெரிய அலட்சியப் போக்குடன் செயல்பட்டிருக்கிறது என்பதைத் தான் இது வெளிக்காட்டுகிறது. கலாச்சார காவலர்களாக, பசு காவலர்களாக தங்களை காட்டிக்கொள்ள வேகம் காட்டுகிற அரசு, மக்களின் அடிப்படை சுகாதாரம், மருத்துவப் பணிகளில் எந்த அளவுக்கு அலட்சியமாக இருந்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது. யோகி அரசு மாட்டின் மீது காட்டிய அக்கறையை மக்கள் மீது காட்டியிருந்தால் இந்த சோகத்தை தடுத்திருக்க முடியும். ஆகவே, 70 குழந்தைகளின் இந்த மரணத்துக்கு யோகி அரசின் நிர்வாக சீர்கேடே காரணம் என்பதால், இதற்கு யோகி அரசு பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிலையில் கோராக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் தொடர் மரணம் அடைவதைத் தடுக்க, தனது சொந்தப் பணத்தில் ஆக்சிஜன் வாங்கிக் கொடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாவதில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கஃபீல் கானை பாராட்ட வேண்டிய அரசு, கோராக்பூர் மருத்துவமனையின் பணியிலிருந்து அவரை நீக்கியுள்ளது. யோகி அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
பொதுவாகவே பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவா செயல்பாடுகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தி, மக்களின் அடிப்படை தேவைகள், அடிப்படை திட்டங்கள் விசயத்தில் கவனம் செலுத்தாமல் செயல்படுவது என்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் நிறுத்தப்பட்டு நாட்டுடைய வளர்ச்சித் திட்டங்கள், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், நாட்டின் அடிப்படை பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.