Skip to main content

குட்கா ஊழல் - விஜயபாஸ்கரின் உதவியாளர் ஆஜர் - பெயருக்குத்தான் விசாரணை என தகவல்

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
 vijayabaskar



குட்கா ஊழல் வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை அடுத்து இன்று அவர் சென்னை நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாததால் சரவணனுக்கு சிபிஐ இறுதி கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

குட்கா ஊழல் வழக்கை விசாரணை நடத்திய குழுவில் சிபிஐ பொறுப்பு தலைவராக இருந்த நாகேஸ்வரராவ், அந்த குழுவில் இருந்த எஸ்.பி.யில் இருந்து கான்ஸ்டெபிள் வரைக்கும் இடமாற்றம் செய்தார். இந்த விவகாரம் பெரிய விவாதத்தை எழுப்பியது.
 

நாகேஸ்வரராவும், முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் சேட்டும் மிக நெருக்கமான நண்பர்கள். இருவரும் சேர்ந்துதான் எடப்பாடி பழனிசாமிக்கு உதவ குட்கா விசாரணைக்கு நியமிக்கப்பட்ட குழுவை கலைத்துவிட்டார்கள் என்று பெரிய விவாதம் ஏற்பட்டது. 
 

விசாரணை குழுவை கலைத்ததை எதிர்த்து குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று வழக்கு தொடர்ந்த திமுகவைச் சேர்ந்த ஜெ. அன்பழகன், இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போவேன் என்று அறிவித்தார். 
 

நாகேஸ்வரராவ் எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்கக்கூடாது என்று சிபிஐயில் இருக்கக் கூடிய இரண்டு அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வழக்கை விசாரிக்கும் சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. 
 

இந்த நிலையில் குட்கா ஊழலை விசாரிக்கும் விசாரணை செய்யும் குழுவை கலைத்தது, குட்கா ஊழலில் தமிழக டிகே ராஜேந்திரன், முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ், இணை கமிசன் வரதராஜு, தினகரன், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளார் ஆகியோர் பெயர்கள் இடம் பெறாத ஒரு குற்றப்பத்திரிகையை சிபிஐ தயாரித்து குட்கா வழக்கில் போட்டுள்ளது. 
 

இவை எல்லாமே நாகேஸ்வரராவ் மற்றும் ஜாபர் சேட் ஆகியோரது திருவிளையாடல் என்று திமுக வட்டாரத்திற்கு தகவல் கிடைத்தது. இது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கானால் நாம் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த நாகேஸ்வரராவ், அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் மற்றும் குட்கா வியாபாரியான மாதவராவ் டைரியில் இடம் பெற்ற காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் கூப்பிட்டு விசாரணை நடத்தியாக வேண்டும் என்று பெயருக்கு காட்ட இவர்களை எல்லோரையும் வரச்சொல்லி விசாரிக்கிறார்.
 

முதல் கட்டமாக அமைச்சர் உதவியாளரான கண்ணனை இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரும் விசாரணையில் ஆஜராகியுள்ளார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

 


 

சார்ந்த செய்திகள்